கிரெகரி ஏரியில் விழுந்த கடல்விமானம்  

நுவரெலியா கிரெகரி ஏரியில் (Gregory Lake) இன்று (ஜனவரி 7, 2026) மதியம் தரையிறங்க முயன்ற சிறிய ரக கடல்விமானம் (Seaplane) ஒன்று ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. நுவரெலியாவுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக வந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது விமானத்தில் இரண்டு விமானிகள் (Pilots) மட்டுமே இருந்துள்ளனர். அவர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்க முயன்றபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது சமநிலை இழப்பு காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.ஏரிக்கு அருகில் இருந்த பொதுமக்களும், பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து உடனடியாக விமானிகளை மீட்டுள்ளனர்.

குறித்த விமானம் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காகவே நுவரெலியாவிற்கு வருகை தந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்து நேரிட்டபோது விமானத்தில் பயணிகள் எவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply