கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (12) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விசுவமடு பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கார் ஒன்றும், வவுனியாவில் இருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது, காரில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பொன்னையா பூபாலன், 34 வயதுடைய சந்திரகுமார் சவேந்திரன் புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குனதர்ஷன், அதே பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய யுவானி பிரசாத் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply