– இஸ்மதுல் றஹுமான் –
நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரி மாணவன் எம.எப்.எம். பராஸ் குண்டெறிதல் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்வி திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கோட்ட மட்டம், வலய மட்டம் போட்டிகளில் 14 வயதின் கீழ் குண்டெறிதல் போட்டியில் பங்கு பற்றி வெற்றிபெற்ற பராஸ் சுகததாஸ விளையாட்டரங்களில் இடம்பெற்ற மேல் மாகாண போட்டியில் 3ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதன் மூலம் அவர் அகில இலங்கை ரீதியான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை வரலாற்றில் குண்டெறிதல் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற பராஸுக்கு நீர்கொழும்பு கல்வி கலாச்சார உதவி அமைப்பு (ECHO) நிதி அன்பளிப்பு வழங்கி கெளரவித்ததுடன் பழைய மாணவர்களும் பாடசாலை சமூகமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.