மட்டக்களப்பு குருக்கள்மடத்தில், மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தினை, களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர்.
1990ஆம் ஆண்டில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை, இன்று நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் அதிகாரிகள் பார்வையிட்டிருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு அதனை பாதுகாப்பு வலயமாக அறிவிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.