குழந்தைகள் காப்பகத்தில்  வன்கொடுமை  – குற்றத்தை ஒப்புக்கொண்ட வின்சென் சான்

இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகம்  (Nursery)  ஒன்றில் பணியாற்றி வந்த வின்சென் சான் (Vincent Chan) (வயது 45) என்பவர், பல இளம் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகள் மற்றும் தவறான நடவடிக்கைகள் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தனது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளாா்.

 இவர் மீது குழந்தைகளுக்கு எதிரான 26 பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளனன.  கடந்த 2022 ஓகஸ்ட் முதல் 2024 மார்ச் வரை, இவர் காப்பகத்தில் மூன்று முதல் நான்கு வயதுடைய பல இளம் பெண் குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குற்றவாளி தனது குற்றச் செயல்களை, காப்பகத்திற்குச் சொந்தமான ஐபாட்கள் மூலம் படம்பிடித்ததுடன், 25,000-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களையும் சேகரித்திருந்தார். ஒரு குழந்தையின் பராமரிப்பாளராக   இருந்த இவர், பெற்றோர்கள் மற்றும் காப்பக நிர்வாகத்தின் நம்பிக்கையை மிகக் கொடூரமான முறையில் மீறியுள்ளார்.

நீதிமன்றத்தில் தனது 26 குற்றச்சாட்டுகளுக்கும் குற்றத்தை ஒப்புக்கொண்டேன்’ என வின்சென் சான் பதிலளித்தார். இவருக்குரிய தண்டனை வரும் ஜனவரி 23, 2026 அன்று வழங்கப்பட உள்ளது.

The post  குழந்தைகள் காப்பகத்தில்  வன்கொடுமை  – குற்றத்தை ஒப்புக்கொண்ட வின்சென் சான் appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply