கெஹெலியவை  75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை  செலுத்துமாறு உத்தரவு

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கியமான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி பொருட்கள் வாங்கப்பட்டதால், முன்னாள் சுகாதார அமைச்சர்  கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், கெஹெலிய ரம்புக்வெல்ல தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, பொது நிதி மற்றும் கொள்முதல் நடைமுறைகள் தொடர்பான பொறுப்புணர்வை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியக் கடன் திட்டத்தைப் பயன்படுத்தி தரமற்ற ‘ஹியூமன் இம்யூனோகுளோபுலின்’ (Human Immunoglobulin) தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு  வழங்கப்பட்டுள்ளது.

#HeheliyaRambukwella #SupremeCourtSL #HealthMinistryScam #FundamentalRights #JusticeInSriLanka

The post கெஹெலியவை  75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை  செலுத்துமாறு உத்தரவு appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply