கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 10 மணி நேர நீர் வெட்டு

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் நாளை (23) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 10.00 மணி முதல்  இரவு 8.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக, நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு 01 முதல் கொழும்பு 15 வரையான பகுதிகளுக்கும், பத்தரமுல்ல, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்தை, தலவத்துகொட, கோட்டே, ராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொட, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கோடத்தவத்தை, மஹொடகமபத்த, மஹோதடவத்தை, மஹோதோடத்தவத்தை, பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களுக்கும் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply