எல்ல-வெல்லவாய வீதியில் நடந்த பேருந்து விபத்தில் காயமடைந்த அனைவரும் உயிர் ஆபத்தில் இருந்து மீண்டுள்ளதாக பதுளை பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தலைவர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற சிகிச்சைகள் முடிந்துவிட்டதாக மருத்துவர் கூறினார்.
இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்தனர். பேருந்தில் பயணித்த 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தியத்தலாவை மற்றும் பதுளை மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள் தங்காலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, சடலங்களை தங்காலைக்கு கொண்டு செல்வதற்காக தியத்தலாவை, பண்டாரவளை மற்றும் பதுளையில் உள்ள முஸ்லிம் பள்ளி வாசல்களில் இருந்து இலவசமாக வாகனங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்றைய தினத்தில் பள்ளிவாசல் நிர்வாகம் எடுத்த இந்த முடிவு மிகவும் பாராட்டத்தக்கதென பலரும் குறிப்பிட்டுள்ளனர்.