சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல்

பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த06 ஆம் திகதி இரவு, வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள ‘விஜய’ கடற்படைக் கப்பலின் ஆலங்குடா துணைப் பிரிவினரால் பங்களவத்தை கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான இரண்டு (02) மூடைகள் சோதனையிடப்பட்டன.

இதன்போது, சுமார் 80 கிலோ கிராம் நிறையுடைய உலர்ந்த மஞ்சள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 07 ஆம் திகதி மாலை சேதவாத்தை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது,  சந்தேகத்திற்கிடமான 16 மூடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றைச் சோதனையிட்ட கடற்படையினர், அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 827 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறாக இரு தினங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 907 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Post Views: 3

நன்றி

Leave a Reply