இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவுக்கு விளக்கமறியல் காலம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (02) இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதேவேளை, போதைப்பொருள் வர்த்தகர்கள், குற்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சேவைகளைப் பெற பொலிஸ் நிலையத்துக்கு வந்த பொதுமக்களிடமிருந்து ஒரு கோடியே 40 ரூபாவினை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பாக சதீஷ் கமகே அண்மையில் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.