அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, இன்னும் 5 ஆண்டுகளில் சந்திரனில் அணுமின்னுற்பத்தி நிலையத்தைத் தொடங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவும், இன்னும் 10 ஆண்டுகளில் சந்திரனில் அணுமின்னுற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாசா, மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலவில் மனிதர்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் மையமாக இந்நிலையம் செயற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரனில் அணு உலை அமைப்பது புதுமையானதாக இருந்தாலும், அது சட்டவிரோதமானது அல்ல எனவும், பொறுப்புடன் பயன்படுத்தப்பட்டால், இந்நடவடிக்கை சந்திரன் தொடர்பான ஆய்வுகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் விண்வெளி பயணங்களுக்கான தொழில்நுட்ப பரிசோதனைகளுக்கு உதவக்கூடும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.