54
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான நிதி துஷ்பிரயோக வழக்கில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
இந்த பயணத்திற்காக 16 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவதற்கான போதிய விசேட காரணங்கள் முன்வைக்கப்படாததால், அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டது.
“சந்தேகநபர் ஜனாதிபதி செயலாளர் என்பதை மறந்து, ஒரு சாதாரண பிரஜையாகக் கருதினால் நீதிமன்றம் எவ்வாறு செயற்படுமோ அவ்வாறே இந்த விடயத்திலும் அதிக அவதானம் செலுத்தப்படுகிறது” என நீதவான் குறிப்பிட்டார்.
மேலதிக செய்திகளுக்கு எமது பக்கத்தைப் பின்தொடருங்கள்! 
