சர்வதேச அமைதிக்கு இரு நாடுகள் இடையே வலுவான உறவு அவசியம்: ஜப்பான் புதிய பிரதமரிடம் மோடி தகவல் | india japan strong relation for world peace pm modi

புதுடெல்லி: சர்​வ​தேச அமை​திக்​கும் ஸ்திரத்​தன்​மைக்​கும் இந்​தி​யா, ஜப்​பான் உறவு வலு​வாக இருப்​பது அவசி​யம் என்று புதி​தாக பதவி​யேற்​றுள்ள ஜப்​பான் பிரதமர் சனே தகைச்​சி​யிடம் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

ஜப்​பான் நாட்​டின் புதிய மற்​றும் முதல் பெண் பிரதம​ராக சனே தகைச்சி கடந்த 21-ம் தேதி தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இதையடுத்து அவருக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஏற்​கெனவே எக்ஸ் தளத்​தில் வாழ்த்து தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த சில தினங்​களுக்கு முன்பு சனே தகைச்சி பிரதம​ராக பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்​து, பிரதமர் மோடி நேற்று தகைச்​சியை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “ஜப்​பான் புதிய பிரதமர் சனே தகைச்​சி​யுடன் தொலைபேசி​யில் உரை​யாடினேன். அவர் பிரதம​ராக பதவி ஏற்​றுக் கொண்​டதற்கு வாழ்த்து தெரி​வித்​தேன்.

அத்​துடன் பொருளா​தார பாது​காப்​பு, ராணுவ ஒத்​துழைப்பு உள்​ளிட்​ட​வற்​றில் இருதரப்பு உறவை மேம்​படுத்​து​வது தொடர்​பான தொலைநோக்கு பார்வை குறித்து ஆலோ​சித்​தோம். உலக அளவில் அமை​தி, ஸ்திரத்​தன்​மை, மற்​றும் செழிப்பை உறுதி செய்​வதற்கு இந்​தியா – ஜப்​பான் இடையே வலு​வான உறவு முக்​கி​யம் என்​பதை ஒப்​புக்​கொண்​டோம்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்​.

நன்றி

Leave a Reply