சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தலைவர்கள் வலியுறுத்தல்  | leaders urge cbi enquiry in tn maws recruitment bribe case

சென்னை: நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் 2,538 ​பணி​யிட நியமனங்களில் முறை​கேடு நடை​பெற்​றுள்​ள​தாக எழுந்துள்ள புகார் குறித்து சிபிஐ விசா​ரிக்க உத்​தர​விட அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: எங்​கும் ஊழல் – எதி​லும் ஊழல். திமுக ஆட்​சி​யின் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​களில் காலி பதவி​களுக்கு புதிய ஊழியர்​களை நியமிக்க நடை​பெற்ற தேர்​வில் முறை​கேடு​கள் நடை​பெற்​ற​தாக​வும், இதில் சுமார் ரூ.800 கோடிக்கு மேல் பணப்​பரி​மாற்​றம் நடந்​துள்​ள​தாக​வும் புகார்​கள் எழுந்​துள்​ளன. இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை தமிழக காவல்​துறை டிஜிபிக்கு அறிக்கை அளித்​து, அதன் அடிப்​படை​யில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரி​யுள்​ளது. தமிழக காவல்​துறை யாரை​யும் காப்​பாற்ற முயற்​சிக்​காமல் நடுநிலை​யோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நகேந்​திரன்: தங்​கள் சொந்த பாக்​கெட்​டு​களை நிரப்ப பணம் பெற்​றுக் கொண்​டு, தகு​தி​யற்ற நபர்​களைப் பணி​யமர்த்​தி, பல்​லா​யிரக்​கணக்​கான திறமை​யான இளைஞர்​களின் வேலை​வாய்ப்​பைப் பறித்​துள்​ளது தமிழக அரசு. தமிழக இளைஞர்​களின் எதிர்​காலத்தை சூனிய​மாக்கி வரும் திமுக அரசின் ஊழல் மோகத்தை அடக்க சிபிஐ விசா​ரணை வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: ஒவ்​வொரு பணிக்​கும் ரூ.35 லட்​சம் வரை லஞ்சம் பெறப்பட்​டிருப்​ப​தற்​கான ஆதா​ரங்​கள் சிக்​கி​யுள்​ள​தாக அமலாக்கத் துறை தெரி​வித்​துள்​ளது. வேலைவாய்ப்பு வழங்​கு​வ​தி​லும் கரப்ஷன், கலெக்​சன், கமிஷன் கலாச்​சா​ரத்தை திமுக அரசு கட்​ட

விழ்த்து விட்​டிருப்​பது கண்டிக்​கத்​தக்​கது. தமிழக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிந்து, வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்ற வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்: இந்த விவ​காரம் குறித்து தமிழகக் காவல்​துறை உரிய விசா​ரணை மேற்கொண்டு உண்​மையை வெளிக்​கொண்டு வரு​வதோடு, தவறு நடை​பெற்​றருக்​கும்பட்​சத்​தில் தொடர்புடைய அனை​வரின் மீதும் கடுமை​யான நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை: நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு​வின் சகோ​தரருக்கு சொந்​த​மான நிறு​வனத்​தின் வங்கி மோசடி வழக்​கில் அமலாக்​கத் துறை​யின் விசா​ரணை​யின்போது இந்த முறை​கேடு விவரம் தெரிய​வந்​துள்​ளது. திமுக அரசின்​கீழ், நடந்த பெரிய மோசடிகள் மற்​றும் முறை​யான ஊழல்​கள் மீண்​டும் மீண்​டும் அம்​பல​மாகி வரு​கிறது. நீதித்​துறை மேற்​பார்​வை​யில் சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்.

புதிய தமிழகம் கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி: இந்த முறை​கேடு குறித்து தமிழக காவல்​துறை வி​சா​ரித்​தால் உண்மை வெளிவ​ராது. எனவே, சிபிஐ வி​சா​ரணைக்​கு உத்​தர​விட வேண்​டும்​.

நன்றி

Leave a Reply