சிறந்த தொழில்நுட்ப திறமையாளர்களை ஈர்க்க விசா கட்டணங்களை திருப்பி செலுத்தவுள்ள இங்கிலாந்து!

முதலீட்டை ஈர்ப்பதற்கும் வளர்ச்சியை அதிகரிப்பதற்குமான திட்டத்தின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கான விசா கட்டணங்களை இங்கிலாந்து அரசாங்கம் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தீர்மானம் சுவிட்சர்லாந்தின் டாவோஸில் இன்று (20) நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் இங்கிலாந்து நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸால் (Rachel Reeves) அறிவிக்கப்படவுள்ளது.

அங்கு அவர், சர்வதேச வணிகத் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன்,  உலகளாவிய நிச்சயமற்ற நிலையில் முதலீட்டிற்கான நிலையான இடமாக அவர் இதன்போது பிரித்தானியாவை முன்னிறுத்துவார். 

செயற்கை நுண்ணறிவு, அறிவியல் மற்றும் நிலையான எரிசக்தி ஆகியவற்றில் உள்ள நிறுவனங்களை இலக்காகக் கொண்ட சலுகைகளை ரேச்சல் ரீவ்ஸ் இதன்போது அடிக்கோடிட்டுக் காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது இங்கிலாந்தில் செயல்பாடுகளை விரிவுபடுத்த அவர்களை ஊக்குவிக்கும்.

கிரீன்லாந்துடன் தொடர்புடைய வர்த்தக நடவடிக்கை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கும் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நன்றி

Leave a Reply