சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது – சீன ஜனாதிபதி!

சீனாவுடன் தாய்வான் இணைவதை எவராலும் தடுக்க முடியாது என தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் சீனா மற்றும் தாய்வான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை சீன இராணுவம் முன்னெடுத்துள்ளது.

அத்துடன் தாய்வானுடன் வேறு எந்த நாடும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என சீனா தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றது.

இதேவேளை சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டு தனி நாடாக பிரிந்து சென்றிருந்தது.

எனினும் தாய்வான்இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது.

எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது.

இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

மேலும், தாய்வான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் சீனா அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார்.

தாய்வானை சீனாவின் தன்னாட்சி பிராந்தியமாகவே கருதுவதாகவும்
அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் புதிய ஆண்டில் அறிவித்துள்ளார்.

அத்துடன் விரைவில் சீனாவுடன் தாய்வான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சூளுரை விடுத்துள்ளார்.

நன்றி

Leave a Reply