65
பிரித்தானியாவிற்குப் பயணம் செய்யும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட பிரித்தானியர்கள் பெப்ரவாி 25 முதல் முதல் புதிய மின்னணு பயண அங்கீகார (Electronic Travel Authorisation – ETA) திட்டத்தினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ETA என்றால் பிரித்தானியாவிற்குள் நுழைய முன்கூட்டியே பெற வேண்டிய ஒரு அனுமதியாகும். 2023-ல் கத்தாரில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு தற்போது முழுமையாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதற்கான கட்டணமாக £10 பத்து பவுண்டுகள் அறிவிடப்படுவதுடன் இரண்டு ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
பிரித்தானியாவிற்கு விசா இன்றி நுழையத் தகுதியுள்ள (Visa-waiver) நாடுகளின் குடிமக்கள் அனைவரும் இதனைப் பெற வேண்டும்.
இதுவரை பிரித்தானிய இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தமது வெளிநாட்டுப் கடவுச்சீட்டைப் (Passport) பயன்படுத்திப் பிரித்தானியாவிற்குள் நுழைய முடிந்தது. ஆனால் இனிஅவர்கள் கட்டாயம் தமது பிரித்தானிய கடவுச்சீட்டை (UK Passport) வைத்திருக்க வேண்டும் அல்லது, தமது வெளிநாட்டு கடவுச்சீட்டில் ‘உரிமைச் சான்றிதழ்’ (Certificate of Entitlement) ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
இவை இரண்டுமே இல்லாதவர்கள் பிரித்தானியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்படலாம் அல்லது விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எனினும் பிரித்தானிய மற்றும் ஐரிஷ் (British & Irish) குடிமக்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் முழுமையான விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.பயணிகள் நீங்கள் எதிா்வரும் காலங்களில் பிரித்தானியாவிற்குப் பயணம் செய்யத் திட்டமிட்டால், விமான நிலையத்திற்குச் செல்லும் முன்பே உங்களிடம் முறையான ETA அல்லது பிரித்தானிய கடவுச்சீட்டு இருப்பதை உறுதி செய்யவும்.ETA இல்லாதவர்கள் போக்குவரத்துச் சாதனங்களில் (விமானம், புகையிரதம்) ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சு (Home Office) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
