ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள உருக்கமான கடிதம்

இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளிற்கு இலவச வீசா வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க கைவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சோசலிச மக்கள் போரம் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.


அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது


காசாவில் பாலஸ்தீனியர்களை கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்கி, குறிவைத்து கொலை செய்ததன் மூலமும் ஒட்டுமொத்த மக்களையும் வலுக்கட்டாயமாக இடம்பெயர்த்ததன் மூலமும் பெருமளவில் பட்டினியால் பாலஸ்தீன மக்களை அழித்ததன் மூலமும் இனப்படுகொலை செய்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படையும் இஸ்ரேலிய அரசாங்கமும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.


காசாவில் உள்ள 2.1 மில்லியன் மக்களும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 900000 குழந்தைகள் பசியால் வாடுவதாகவும் 70,000 பேர் ஏற்கனவே ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் காட்டுவதாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இஸ்ரேலிய யூதர்களிடையே நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக் கணிப்பில் இஸ்ரேலிய செய்தித்தாளான ஹாரெட்ஸில் வெளியிடப்பட்டது பதிலளித்தவர்களில் 82 வீதமானவர்கள் காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை ஆதரித்ததாகவும் 56 வீதமானவர்கள்பேர் இஸ்ரேலின் பாலஸ்தீன குடிமக்களை வெளியேற்றுவதை ஆதரித்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் அதன் பெரும்பான்மையான குடிமக்களின் முழு ஆதரவுடன் போர்க்குற்றங்களையும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்து வருகிறது.


இதன் பின்னணியில் உங்கள் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பாலஸ்தீன இலங்கை நட்புற சங்கத்தை வழிநடத்தும் அதே வேளையில் நீங்கள் தலைமை தாங்கும் எங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் இனப்படுகொலைக்கு ஆளாகும் பாலஸ்தீன மக்களை ஆதரிக்க எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையையும் எடுக்கத் தவறிவிட்டது.


இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குள் தொடர்ந்து அனுமதித்து வருகிறீர்கள் அவர்களில் பலர் ஐ.டி.எஃப் உறுப்பினர்களாகவும் போர்க் குற்றவாளிகளாகவும் இருக்கலாம். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது மற்றும் தடுப்புக்காவல் மூலம் பாலஸ்தீனத்துடன் வன்முறையற்ற ஒற்றுமையைக் கொண்டவர்களை நீங்கள் குறிவைத்துள்ளீர்கள் அவர்களின் தடுப்புக்காவல் உத்தரவுகளில் நீங்களே கையொப்பமிட்டுள்ளீர்கள். இஸ்ரேல் பாலஸ்தீன தொழிலாளர்களை வெளியேற்றியதால் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பஇ நமது மக்களை பாதுகாப்பற்ற வேலை நிலைமைகளுக்கு ஆளாக்கஇ இலங்கையர்களை இஸ்ரேலுக்கு தொழிலாளர்களாக தொடர்ந்து அனுப்பி வருகிறீர்கள்.


உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கை எடுப்பதில் இராஜதந்திர உறவுகளை முறித்துக் கொண்டும் தடைகளை விதித்தும் நீங்கள் தோல்வியடைந்துவிட்டீர்கள். இப்போது பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் பங்கேற்ற பிறகு இஸ்ரேலியர்களை விசா இல்லாமல் எங்கள் நாட்டிற்கு வந்து எங்கள் நிலத்தை அனுபவிக்கவும், இங்கு வணிகம் செய்யவும் அழைக்கிறீர்கள்.


உங்கள் அரசாங்கத்தின் இந்தக் கொள்கை நமது நாட்டின் தார்மீக மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல், நமது மக்களையும் நமது பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் உங்கள் கொள்கை முடிவை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். தற்போது ஐனுகு இல் பணியாற்றும் எந்த இஸ்ரேலியரையும் இலங்கை எல்லைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று டிசம்பர் 2024 இல் மக்கள் விடுத்த கோரிக்கைகளை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இறுதியாகஇ இஸ்ரேலுடனான உறவுகளை முறித்துக் கொண்டு, குறைந்தபட்சம் இப்போதாவது பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உண்மையாக பாடுபட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

நன்றி

Leave a Reply