தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து இந்தியப் பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். அவர் ஒரு மனம் கவர்ந்த தலைவராகவும், தலைசிறந்த நிர்வாகியாகவும் எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் அசாத்தியமான மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் அமைந்திருந்தது.’ […]
