ஜெருசலம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, பயங்கரவாத தாக்குதலாக வர்ணித்துள்ள எமிரேட்ஸ்

ஜெருசலேம் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்துள்ள எமிரேட்ஸ், அதனை பயங்கரவாத தாக்குதலாக வர்ணித்துள்ளது.



இந்த பயங்கரவாதச் செயல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கில் அனைத்து வகையான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தையும் தொடர்ந்து நிராகரிப்பதாகவும் எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், இஸ்ரேல் அரசுக்கும் அதன் நட்பு மக்களுக்கும் எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் தனது உண்மையான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது, காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய பிரார்த்திப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று (08) ஜெருசலேமின் வடக்கே ராமோட் அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், குறைந்தது 6 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டு 15 பேர் காயமடைந்தனர்.

நன்றி

Leave a Reply