டி:20 முத்தரப்பு தொடர்; இலங்கை – சிம்பாப்வே இடையிலான போட்டி இன்று!

பாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு ஒருநாள் தொடரில் இன்றைய தினம் நடைபெறும் 5 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியானது இன்று மாலை 06.00 மணிக்கு ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

தொடரில் பாகிஸ்தான் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது இறுதிப் போட்டியாளரை கிட்டத்தட்ட தீர்மானிக்கும் போட்டியாக இது அமையும்.

முத்தரப்பு தொடரில் விளையாடிய மூன்று போட்டிகளில் சிம்பாப்வே ஒரு ஆட்டத்தில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.

அந்த ஒரு வெற்றி இலங்கைக்கு எதிராக கிடைக்கப் பெற்றது.

இதற்கிடையில் தொடரில் தனது எதிராளிகளிடம் தலா ஒரு ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, பாகிஸ்தான் பயணத்தின் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

நன்றி

Leave a Reply