டிகிரி தேர்ச்சி போதும்… தமிழ்நாட்டில் உள்ள பெடரல் வங்கியில் அப்ரண்டிஸ் வேலை – மாதம் ரூ.18,000 சம்பளம்! Federal Bank Apprentice Recruitment 2026

Federal Bank Apprentice Recruitment 2026: பெடரல் வங்கியில் (Federal Bank) தற்போது காலியாக உள்ள பல்வேறு அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. வங்கித்துறையில் பணியாற்ற விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி 17.03.2026-க்குள் ஆன்லைன் (Online) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற முக்கிய விவரங்களை கீழே விரிவாகக் காணலாம்.

Description Details
துறைகள் Federal Bank
பெடரல் வங்கி
காலியிடங்கள் பல்வேறு
பணி அப்ரண்டிஸ் (Apprentice)
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்
கடைசி தேதி 17.03.2026
பணியிடம் Kerala, Tamil Nadu, Karnataka 
அதிகாரப்பூர்வ
இணையதளம்
https://www.federal.bank.in/

பெடரல் வங்கி வேலைவாய்ப்பு 2026 கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் காலியிடங்கள்
அப்ரண்டிஸ் (Apprentice) பல்வேறு

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஃபெடரல் வங்கியில் அப்ரண்டிஸ் (Apprentice) பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை (Degree) முடித்திருக்க வேண்டும்.
  • பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • இது முழுநேரப் படிப்பாக (Full Time Course) இருக்க வேண்டும். அஞ்சல் வழி அல்லது தொலைதூரக் கல்வி பயின்றவர்கள் தகுதியற்றவர்கள்.

ஃபெடரல் வங்கியில் அப்ரண்டிஸ் (Apprentice) பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • விண்ணப்பதாரர்களின் வயது 01.03.2026 அன்று 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • அதாவது, விண்ணப்பதாரர்கள் 01/03/1998 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஃபெடரல் வங்கியில் அப்ரண்டிஸ் (Apprentice) பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான சம்பளம் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • தேர்வு செய்யப்படும் அப்ரண்டிஸ் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 18,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:

  1. Shortlisting: விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் முதலில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  2. Personal Interview: நேரடியாகவோ அல்லது இணைய வழியாகவோ நடைபெறும் நேர்காணல் மூலம் இறுதித் தேர்வு நடைபெறும்.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்


Click here
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 10.03.2026
  • விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.03.2026

ஃபெடரல் வங்கி அப்ரண்டிஸ் (Apprentice) பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:

  • படி 1: NATS போர்ட்டலில் பதிவு செய்தல்: விண்ணப்பதாரர்கள் முதலில் இந்திய அரசின் தேசிய அப்ரண்டிஷிப் பயிற்சித் திட்ட (NATS) இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இணையதள முகவரி: https://nats.education.gov.in
  • படி 2: பதிவு எண் (Enrolment ID) பெறுதல்: பதிவு செய்தவுடன், NATS போர்ட்டல் மூலம் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrolment ID) வழங்கப்படும். இந்த எண்ணை எதிர்காலத் தொடர்புகள் மற்றும் விண்ணப்பச் சரிபார்ப்பிற்குப் பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.
  • படி 3: வங்கிப் பணிக்கு விண்ணப்பித்தல்: NATS போர்ட்டலில் பதிவு செய்த பிறகு, உங்கள் கணக்கில் லாக்-இன் (Login) செய்து வங்கியால் வெளியிடப்பட்டுள்ள அப்ரண்டிஸ் வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். Login செய்த பிறகு, “Apply Against Advertised Vacancies” என்ற பிரிவின் கீழ் “Federal Bank” என்பதைக் கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். நேரடி Login பக்கம்: https://nats.education.gov.in/student_type.php

முக்கியக் குறிப்புகள்:

  • விண்ணப்பிக்கும் முன் உங்களிடம் தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகள் ஸ்கேன் செய்யப்பட்டுத் தயாராக இருப்பதை உறுதி செய்யவும்.
  • NATS போர்ட்டலில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்தப் பணிக்குத் தகுதியானவர்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF Click Here
ஆன்லைன் விண்ணப்ப படிவம் Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click Here

நன்றி

Leave a Reply