டெக்னோ Pova ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | tecno pova slim 5g smartphone launched in india price features

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ Pova ஸ்லிம் 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல்.

இந்நிலையில், டெக்னோ நிறுவனம் தற்போது Pova ஸ்லிம் 5ஜி என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது உலக அளவில் மிகவும் மெல்லிய போன் என டெக்னோ தெரிவித்துள்ளது.

டெக்னோ Pova ஸ்லிம் 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

  • 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6400 சிப்செட்
  • பின்பக்கத்தில் 50 + 2 மெகாபிக்சல் என இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது
  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,160mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் சார்ஜிங் ஸ்பீடு
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட்
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • வெள்ளை, நீலம், கருப்பு என மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.19,999

நன்றி

Leave a Reply