மும்பை மேல் நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன.
மிரட்டலை தொடர்ந்து, தெற்கு மும்பையின் கோட்டை பகுதியில் அமைந்துள்ள மேல் நீதிமன்ற வளாகத்தை உடனடியாக காலி செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கின.
அனைத்து நீதிமன்ற அறைகளும் கலி செய்யப்பட்டன. மேலும் சட்டத்தரணிகள் வளாகத்தை விட்டு வெளியேறும் பணியில் ஈடுபட்டனர்.
விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று காலை டெல்லி மேல் நீதிமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியும் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து டெல்லி நீதிமன்றத்திற்கு பெரும் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டது.
இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் சீர்குலைந்தன.
அறிவிப்பு பரவியவுடன், டெல்லி நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன.
நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் ஊழியர்கள் வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
திடீரென ஏற்பட்ட வெளியேற்றம் குழப்பமான காட்சிகளை உருவாக்கியது.
மக்கள் அச்சத்தில் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே ஓடினர்.
எனினும், இரு நீதிமன்ற வளாகங்களிலிருந்தும் இதுவரை, சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் மீட்கப்படவில்லை.
மிரட்டல் மின்னஞ்சலின் மூலத்தைக் கண்டறிந்து அதன் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.