அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குண்டு வீச்சுத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டு ஹமாஸ் அமைதிக்குத் தயாராக இருப்பதாக கூறி, அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் சனிக்கிழமை (04) காசாவில் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்களின் விளைவாக ஆறு பேர் உயிரிழந்தனர்.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, காசா நகரில் ஒரு வீட்டைத் தாக்கிய இஸ்ரேலிய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
அதேநேரத்தில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் நடந்த மற்றொரு தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஹமாஸின் பதிலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை உள்ளடக்கிய ட்ரம்பின் காசா திட்டத்தின் முதல் கட்டத்தை “உடனடியாக செயல்படுத்த” இஸ்ரேல் தயாராகி வருவதாகக் கூறிய சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்தன.