ஹமாஸ், பணயக்கைதிகளை விடுவித்து ட்ரம்பின் திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் காசா அமைதி ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் பங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து இன்று அவர் எக்ஸில் பதிவிட்டுள்ளதாவது,
காசாவில் அமைதி முயற்சிகள் தீர்க்கமான முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையை நாங்கள் வரவேற்கிறோம். பணயக்கைதிகள் விடுதலைக்கான அறிகுறிகள் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கின்றன என்றார்.
மேலும், புது டெல்லியின் நீண்டகால நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர் மோடி, மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
நீடித்ததுமத் நியாயமானதுமான அமைதியை நோக்கிய அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து வலுவாக ஆதரிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வர்த்தகப் பதற்றங்கள் காரணமாக அமெரிக்க – இந்திய உறவுகள் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் மோடியின் இந்த பதிவு வந்துள்ளது.
வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் உக்ரேனுடனான தொடர்ச்சியான போருக்கு மத்தியில் இந்தியா ரஷ்யாவின் எண்ணெய் தொடர்ந்து வாங்குவதைக் காரணம் காட்டி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி ட்ரம்ப் இந்திய ஏற்றுமதிகளுக்கு 50% வரியை விதித்தார்,
இந்த வரிகள் இரு நாடுகளுக்கு இடையிலும் ஒரு சர்ச்சைக்குரிய வியமாக இருந்து வரும் நிலையில் இந்திய அதிகாரிகள் அவற்றை நியாயமற்றவை என்று கூறியுள்ளன.