75
2026 ஏப்ரல் 25 அன்று வாஷிங்டன் ஹில்டன் அருகே வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்க விருந்து (White House Correspondents’ Dinner) நடைபெறும் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஏற்பட்டது. பாதுகாப்பு சோதனைப்பகுதியை உடைக்க முயன்ற ஒருவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இரவு சுமார் 8:30 மணியளவில், விடுதியின் பாதுகாப்பு சோதனைச் சாவடிக்கு அருகே சுமார் 5 முதல் 8 முறை தோட்டாக்கள் பாய்ந்த சத்தம் கேட்டதாக தொிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்ட சில நொடிகளிலேயே, மேடையிலிருந்த அதிபர் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோரை பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தில் நிகழ்ச்சியில் இருந்தவர்களுக்கு பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை, ஆனால் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவா் காயமடைந்த போதிலும் அவர் அணிந்திருந்த பாதுகாப்பு உடை காரணமாக உயிர் தப்பினார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் கோல் டோமஸ் ஆலன் (31) என்ற நபர் கலிபோர்னியாவில் வைத்து உடனடியாகக் கைது செய்யப்பட்டார் , மேலும் அவர் தனியாகவே செயல்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த சம்பவத்திற்குப் பின்னா் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
#Trump #WhiteHouseCorrespondents’ Dinner #Washington D.C. #Shooting Incident #Gunfire
