
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிட்டு, மீட்புப் பணிகளில் ஈடுபடும் விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளது.
எனவே, ட்ரோன்களை பறக்கவிடுவதை பொதுமக்கள் தவிர்க்குமாறும் இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது.
உரிய அனுமதிகள் இன்றிப் பறக்கவிடப்படும் ட்ரோன்கள் அத்தியாவசியமான மீட்புப் பணிகளுக்கான விமானப் பயணங்களுக்கு இடையூறாக இருப்பதாக விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, அனைத்து ட்ரோன் புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கங்கள் பற்றிய தகவல்களை 0112343970, 0112343971 அல்லது 115 அவசர இலக்கத்தின் மூலம் முன்கூட்டியே அறிவிக்குமாறும் இலங்கை விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
