தங்கம் விலை கிராமுக்கு ரூ.165 சரிவு: ஒரு பவுன் ரூ.90,080-க்கு விற்பனை! | gold price today falls by rupees 165 per gram

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.10) கிராமுக்கு ரூ.165 என சரிந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது.

கடந்த 4-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. நாளொன்றுக்கு இரண்டு முறை கூட தங்கம் விலை உயர்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று (அக்.10) தங்கம் விலை குறைந்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,260-க்கு விற்பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.1,320 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.90,080-க்கு விற்பனை ஆகிறது. இதே போல 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,440 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.98,272-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,000 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.74,640-க்கும் விற்பனை ஆகிறது.

இன்று வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.180-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 உயர்ந்து, ரூ.1,80,000-க்கு விற்பனை ஆகிறது. கடந்த 1-ம் தேதி வெள்ளி விலை கிராம் ஒன்று ரூ.161 என இருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply