தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தின் புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிட்டு வைத்தார்.

 தமிழகj்தின் தனித்துவமான கல்விக் கொள்கையை உருவாக்கும் நோக்கில், 2022-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற டெல்லி உயர் நீதிமன்ற  நீதிபதி முருகேசன் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினரால் இக் கல்விக் கொள்கை  உருவாக்கப்பட்டது.

இந்த குழு, துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் என பல தரப்பினரிடம் பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களை சேகரித்து ,இப் புதிய கல்விக் கொள்கையை  வடிவமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப் புதிய கல்விக் கொள்கை  முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வைத்துள்ளார்.  பாடசாலைக் கல்வியிலிருந்து பட்டப்படிப்புவரை முழு கல்வி தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும் என்பது இக்கொள்கையின்  முக்கிய அம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply