‘தம்புளை தண்டர்ஸ்’ அணியின் உரிமையாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு!

கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதி தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ‘தம்புளை தண்டர்ஸ்’ அணியின் உரிமையாளர் தமீம் ரஹ்மானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் முடிவு செய்துள்ளார்.

இந்த விடயத்தை விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவு இன்று (03) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர், பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியக் குடிமகன், அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் ரஹ்மானுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

வழக்கை அழைப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

அதன்படி, நீதிபதி கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, எதிர்வரும் டிசம்பர் 5, அன்று வழக்கு தொடர உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply