தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரைக் கூட்ட்தில் 31 பேர் பலி – பலர் காயம்!

தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசு மருத்துவமனையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலுவுடன் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, “குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்துள்ளனர்.” என கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயக்கமடைந்துள்ளனர்.

நன்றி

Leave a Reply