தாய்லாந்து கம்போடியா ஆகிய நாடுகளுக்கிடையில் மீண்டும் போர் பதற்றம்!

தாய்லாந்து கம்போடியா ஆகிய நாடுகளுக்கிடையில் சர்ச்சைக்குரிய எல்லைபிரச்சினை தொடர்பாக நீண்டகால மோதல் நிலவிவருகின்ற நிலையில் இருநாடுகளுக்கிடையில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது

இதன்காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாய்லாந்து கம்போடியா எல்லைபகுதியில் இருந்து வெளியேறிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாய்லாந்து கம்போடியா ஆகிய நாடுகளுக்கிடையில் சர்ச்சைக்குரிய எல்லைபிரச்சினை தொடர்பாக நீண்டகால மோதல் நிலவிவருகின்ற நிலையில் தாய்லாந்து இன்று கம்போடியா மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது

எல்லைப்பகுதியில் கம்போடியா துப்பாக்கி சூடு நடாத்தியதாகவும் இதில் பாதுகாப்பு படைவீரர் ஒருவரி உயிரிழந்த சம்பவத்திற்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது

இதேவேளை கம்போடியாவில் தாய்லாந்து மேற்கொண்ட பதில் தாக்குதலில் பொதுமக்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்

இந்த மோதல் காரணமாக இருநாடுகளுக்கிடையில் தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனிடையே தாய்லாந்து மீது எந்தவொரு ஆக்கிரமிப்பினையும் மேற்கொள்ளவில்லை என தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul தெரிவித்துள்ளார்

எனினும் தமது நாட்டின் இறையான்மை மீறப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் தாய்லாந்து பிரதமர் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளார்

இதேவேளை இருநாடுகளுக்கிடையில் போர்பதற்றம் அதிகரித்துவரும் நிலையில் தாய்லாந்து -கம்போடியா எல்லைப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நன்றி

Leave a Reply