தியானா நதீரா மட்டுமே இந்தியாவில் இருந்து பங்கேற்கிறார்

சர்வதேச அளவில் உயர் கல்விக்கு ஐரோப்பிய யூனியன் வழங்கும் மிகவும் பிரசித்தி பெற்ற  ERASMUS MUNDUS Scholarship தேர்வில் தகுதி பெற்றுள்ளார் தியானா நதீரா.


இதன்மூலம் நான்கு செமஸ்டர் கொண்ட இரண்டு வருட ஆராய்ச்சி மேற்படிப்பு ஒவ்வொரு செமஸ்டரும் ஐரோப்பாவில் உள்ள நான்கு வெவ்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.


Mobility Track Syllabus பாடத்திட்டத்தில் மேற்படிப்பை படித்து முடித்த பிறகு  Joint Masters Degree சான்றிதழ் வழங்கப்படும்.


முதல் செமஸ்டர் இங்கிலாந்தில்  GLASGO University,  2வது செமஸ்டர்  எஸ்டோனியா TALLINN University  3வது செமஸ்டர் ERASMUS University  4வது செமஸ்டர் Mexico University லும்  ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.


இதற்கான கல்வி கட்டணம், உணவு செலவுகள், ஹாஸ்டல் கட்டணம், போக்குவரத்து விமான கட்டணம் உட்பட முற்றிலும் ஐரோப்பிய யூனியன் ஏற்றுக் கொள்கிறது.


மலப்புறம் மாவட்டம் திருவாலி கிராமத்தை சேர்ந்த நாசர் – கதீஜா தம்பதியர் மகள் தியானா நதீரா.


ஒன்றாம் வகுப்பு முதல் +2வரை அரசு பள்ளிகளில் பயின்றவர்.


பி.ஏ ஆங்கில இலக்கியம் மம்பாடு எம்.இ.எஸ்.கல்லூரியிலும், முதுகலை ஆங்கில இலக்கியம் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்றவருக்கு ஸ்காலர்ஷிப்புடன் கூடிய இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


+2 வுக்கு பின்னர் ஆங்கில புத்தக வாசிப்பு திறனை வளர்த்துக்கொண்ட தியானா நதீரா, அதுவே தனக்கு இந்த ஸ்காலர்ஷிப் தேர்வை எதிர்கொள்ள எளிதாக இருந்தது என்று கூறுகிறார்.


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் இந்தாண்டு தியானா நதீரா மட்டுமே இந்தியாவில் இருந்து பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Colachel Azheem

நன்றி

Leave a Reply