திருமணத் தாமதங்களை தடுப்பதற்கும், இளைஞர்கள் திருமணத்தில் இணைவதை ஊக்குவிப்பதற்கும் துருக்கி ஒரு புதிய சலுகைத் தொகுப்பை அறிவித்துள்ளது.
இதில், திருமணமான 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பிச் செலுத்தத் தொடங்கும் வகையில் வட்டியில்லா கடனும், 42 கடைகளில் 40% வரை தள்ளுபடிகளும் அடங்கும்.
குழந்தை பிறந்தால், கடனைத் திருப்பிச் செலுத்துவதை மேலும் ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பதும் இந்த முடிவில் அடங்கும் என துருக்கிய குடும்ப நலத்துறை அமைச்சர் வெளியிட்ட காணொளி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

