துபாய் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் 12வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
சற்று தளர்த்தியிருந்த தாக்குதலை ஈரான் மீண்டும் வளைகுடா நாடுகளில் தீவிரப்படுத்தியுள்ளது.
கத்தார், ஈராக்கின் குர்த்திஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று ( 11) ஈரான் ராணுவம் துபாய் விமான நிலையம் அருகே வீசிய ட்ரோன்கள் விழுந்து வெடித்தது.
இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்த 4 பேரில் ஒருவர் இந்தியர் ஆவார்.
தற்போது துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சீராக இயங்கி வருகிறது.
இதனால் எந்த பெரிய சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
