தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் புனரமைப்புப் பணி – Oruvan.com

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான 19 ஆவது கி.மீ தொடக்கம் 34 ஆவது கி.மீ வரையான பிரதேசத்தை விரிவான மேற்பரப்பு கோடுகள் மற்றும் உள்ளகக் கட்டமைப்பு படிநிலைகள் அழிவடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், குறித்த வீதியைப் புனரமைப்புச் செய்தல், வீதியின் அடித்தளத்தில் நிலவுகின்ற குறைபாடுகள், புதிதாக தாரிட்டு செப்பமிட வேண்டியுள்ளது.

அதற்காக, தேசிய போட்டி விலைமனுக்கோரல் பெறுகை முறையைக் கடைப்பிடித்து தகைமையுடைய உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் கணிசமான பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்த விலைமனுதாரரான மாகா இன்ஜியரிங்க் (பிறைவெட்) லிமிட்டட் இற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த விதந்துரையின் அடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தை விலைமனுதாரரான மாகா இன்ஜியரிங்க் (பிறைவெட்) லிமிட்டட் இற்கு வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நன்றி

Leave a Reply