தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இயந்திரங்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து!

வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவில் இருந்து 113 இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்த்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

ஒப்பரேஷன் சிந்துார் தாக்குதலுக்கு பின்னர், ராணுவ பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அந்த வகையில், உள்நாட்டில் போர் விமானங்களை தயாரித்து வரும் கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும், ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்'(Hindustan Aeronautics Limited) நிறுவனத்திடம் இருந்து, 97 தேஜஸ் ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

இதற்காக அந்நிறுவனத்துடன், 62ஆயிரத்து 370 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில், இந்திய ராணுவ அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

அதன்படி, 2027 – 28ம் நிதியாண்டு முதல் இந்திய ராணுவத்துக்கு போர் விமானங்கள் வழங்கும் பணியை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தீவளை, அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள், 97 போர் விமானங்களை இந்திய விமானப்படைக்கு அந்நிறுவனம் தயாரித்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply