தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் விருதினை வென்றெடுத்தார் மெஸ்சி

2025ம் ஆண்டிற்கான மேஜர் லீக் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வன்கொவர் அணியை வீழ்த்தி இண்டர் மயாமி அணி  சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

இண்டர் மயாமி மற்றும் வன்கொவர் அணிகளுக்கிடையிலட நடைபெற்ற இறுதிப்போட்டியில் இண்டர் மயாமி அணிக்கு 8வது நிமிடத்தல் அதிர்ஷ்டம் கைகொடுத்தது.

வன்கொவர் அணியின் எடியர் ஒகம்போவின் காலில் பட்டு இண்டர் மயாமி அணிக்கு ஒன் கோலினை பெற்றுக்கொடுத்தார் இதனால் 1-0 என இண்டர் மயாமி அணி முன்னிலைப்பெற்றது.

பிறகு இரு அணிகளும் மாறி மாறி பல முயற்சிகளை மேற்கொண்டும் அது கைகூடாத நிலையில் முதல் பாதி 1-0 என நிறைவுக்கு வந்தது.

பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் 60வது நிமிடத்தில் வன்கோவர் அணியின் அலி அஹ்மட் தனது அணியின் முதல் கோலினை பதிவு செய்து 1-1 என போட்டியை சமப்படுத்தி அசத்தினார்.

இதனால் போட்டி விறுவிறுப்பின் உச்சத்திற்கு சென்றது. இந்நிலையில் 71வது நிமிடத்தில் ரோட்ரிகோ டி போல் இன்டர் மயாமி அணியின் இரண்டாவது கோலினை பதிவு செய்து 2-1 என தனது அணியை முன்னிலைப்படுத்தி அசத்தினார்.

பின்னர் போட்டியின் கடைசி தருணத்தில் வன்கோவர் அணியை தோல்வியடையச்செய்யும் மற்றுமொரு கோலினை டிடியோ அல்லன்டே அடித்து 3-1 என இண்டர் மயாமி அணியை வெற்றிப்பெற வைத்து அசத்தினார்.

இதனால் இப்பருவகாலத்திற்கான மேஜர் லீக் கால்பந்தாட்ட சம்பியனாக  லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இண்டர் மயாமி அணி வெற்றிப்பெற்று சாதனை படைத்தது.

blank

அதே நேரம் தனது கால்பந்து வாழ்க்கையில் 48வது கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார் லியோனல் மெஸ்சி.

blank

இன்டர் மயாமி அணியில் மெஸ்சி இணைந்து ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளதுடன் இம்முறையும் அணியின் அதி சிறந்த வீரருக்கான விருதினை மெஸ்சி தட்டிச்சென்றார். தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்த விருதினை மெஸ்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

blank

நன்றி

Leave a Reply