தொண்டமனாற்று பகுதியில் டெங்கு பரவும் சூழலை பேணிய 10 பேருக்கு எதிராக வழக்கு

by admin



யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 08 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட தொண்டமானாறு பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு களவிஜயத்தின் போது டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 10 ஆதன உரிமையாளர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது மன்றில் முன்னிலையான 10 ஆதன உரிமையாளர்களும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , தலா 08 ஆயிரம் ரூபாய் வீதம் 10 பேருக்கும் 80 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply