மட்டக்களப்பு, பெரியபோரதீவு பகுதியில் சுமார் 14 இலச்சம் ரூபாய் பெறுமதியான தொலை தொடர்பு கோபுரத்தின் 44 மின்கலங்களைத் திருடி விற்பனை செய்தவரையும் அதனைக் கொள்வனவு செய்தவரையும் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இன்று காலை இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும், இதன் போது அவர்கள் பயன்படுத்திய சிறிய ரக வாகனம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணையின் பின்னர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பெரும் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.