53
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் (KIA) தனது விசா மற்றும் போர்டிங் பாஸை நண்பருக்குக் கொடுத்து, அவரை சட்டவிரோதமாக லண்டனுக்கு அனுப்பி வைத்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியப் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிவரவு (Immigration) சோதனைகளை முடித்த பிறகு, இருவரும் விமான நிலைய கழிவறையில் சந்தித்துள்ளனர். அங்கு ராஜகோபால் தனது லண்டன் பயணத்திற்கான விசா மற்றும் போர்டிங் பாஸை சருஷனிடம் கொடுத்துள்ளார்.
சருஷன் குணசேகரன் அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாக லண்டன் விமானத்தில் ஏறிச் சென்றுவிட்டார்.
நண்பரை அனுப்பிவிட்டு, ராஜகோபால் சுமார் 8 மணிநேரம் பாதுகாப்புப் பகுதியில் (Security Hold Area) சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்துள்ளார். இதைக் கவனித்த CISF வீரர்கள் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர்.
விசாரணையில், தனது ஆவணங்கள் தொலைந்துவிட்டதாக ராஜகோபால் கூறியுள்ளார். ஆனால், ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் சோதித்தபோது, அவரது பெயரில் ஏற்கனவே ஒருவர் லண்டன் சென்றுவிட்டது உறுதியானது.
லண்டன் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார் (Deportation) எனத் தெரிகிறது.
________________________________________
