நாங்கள் எப்படியோ வாழ்கிறோம்…

JVP  மற்றும் NPP யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வேதனத்தை கட்சி நிதிக்கே வழங்குகிறார்கள் என்பது நாட்டு மக்கள் அறிந்த உண்மை எனவும், இதுவே தமது அரசியல் இயக்கத்தின் கலாசாரம். எமது வங்கிக் கணக்குகளின் வெளிப்படைத்தன்மையை நாட்டுக்குக் காட்ட வாய்ப்பளித்தமைக்கு நன்றி. UNP, SJB   ஆகிய கட்சிகளும் தங்கள் கட்சி நிதிகள் தொடர்பாக இவ்வாறு செயற்பட வேண்டும் என நான் முன்மொழிகிறேன்.”


ஜே.வி.பி உறுப்பினர்கள் நீண்ட காலமாகத் தமது வேதனத்தை கட்சி நிதிக்கே அனுப்பி வருகின்றனர். NPP யும் அதே கலாசாரத்தையே பின்பற்றுகிறது. தனிப்பட்ட ரீதியில் எவரும் எதனையும் பெற்றுக்கொள்வதில்லை. எமது 159 உறுப்பினர்களும் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள். அனைவரினதும் வாழ்க்கைக் கதைகளை இங்கே கூற முடியாது, ஆனால் நாங்கள் எப்படியோ வாழ்கிறோம். ஒரு அரசியல் இயக்கமாக நாங்கள் முன்மாதிரியாகச் செயற்படுகிறோம்.”


பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


பிரதமரின் கருத்துக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி Mp, பொய் சொல்வதே ஜே.வி.பியின் கலாசாரம். “நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டாலும், இவர்களுக்குத் தேவையான அனைத்தையும் கட்சி நிதியிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இவர்கள் சம்பளம் பெறாமல் இருப்பதில்லை.”


“இந்த உறுப்பினர்களின் பெயரிலேயே வங்கிக் கணக்குகள் உள்ளன. அதில் ஒரு பகுதியை மட்டுமே கட்சிக்கு அனுப்பிவிட்டு, எஞ்சிய பகுதியை அவர்கள் வைத்துக்கொள்கிறார்கள் என்பதை நான் நிரூபிப்பேன்.”

நன்றி

Leave a Reply