பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 580 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 5,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
நாடாளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் கடந்த 24 மணிநேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 28ஆயிரத்து 689 பேர் சோதனையிடப்பட்டனர்
இதன்போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 580 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
குற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய 17 பேரும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 267 பேரும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 176 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
மேலும் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 23 பேரும் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய 21 பேரும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணித்த 3 635 பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி முதல் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 5,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகத்தின் பேரில் 129,448 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 56,365 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மொத்தமாக 6,127,138 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், 47,938 மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 7 69,933 பேருக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் மூலம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நேற்று வரை, 67 வு56 துப்பாக்கிகள், 73 ரக கைத்துப்பாக்கிகள், 50 ரிவோல்வர்கள் மற்றும் 1,907 ஏனைய ஆயுதங்கள் உட்பட மொத்தம் 2,097 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், ஜனவரி முதல் ஒக்டோபர் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், 1,482 கிலோ 820 கிராம் ஹெரோயின், 14,434 கிலோ 468 கிராம் கஞ்சா, 32 கிலோ 642 கிராம் கொக்கெய்ன், 2,542 கிலோ 454 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 3,961,790 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
