நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறி ஒன்றும் – பேருந்து ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் பகுதியில் இருந்து நாரம்மல நோக்கிச் சென்றி லொறி கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த பேருந்து மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் லொறியில் பயணத்தில் சாரதி, இரண்டு சிறுமிகள் என ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும், லொறியின் சாரதி மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுன், நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.