நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது!

நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, பிரபல வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிலையில்
ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடனை , சட்டவிரோதமாக ஏனைய நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் , அனில் அம்பானி இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ருபாய் நிதி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று(11) அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply