தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் கீரிப்பிள்ளை கடித்ததன் விளைவாக ‘நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டு 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு, வீட்டிற்குள் கோழியைப் பிடிக்க வந்த கீரிப்பிள்ளை ஒன்று, உறங்கிக் கொண்டிருந்த குறித்த சிறுவனின் கையைக் கடித்துள்ளது. காயம் ஏற்பட்ட சமயத்தில், பெற்றோர் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்காமல், மருந்தகம் ஒன்றில் மாத்திரை வாங்கித் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவனுக்குத் […]
