நீர்கொழும்பில் புகையிரதம் தடம் புரண்டதால், புகையிரத சேவை தாமதம் – பிரதான வீதியில் போக்குவரத்துக்கும் தடை


– இஸ்மதுல் றஹுமான் –

    இன்று -11-  சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பயணிகள் புகையிரதம்  நீர்கொழும்பு புகையிரத நிலையத்திற்கு அண்மையில் பிரதான வீதிக்கு குறுக்காக தடம் புரண்டது.

    ​இச் சம்பவத்தினால் நீர்கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிய புகையிரத பாதையில் ரயில் சேவை  தாமதம் அடைந்ததுள்ளது.

 நீர்கொழும்பு கொப்பரா சந்தியில் இருந்து நீர்கொழும்பு டவுன் செல்லும் பிரதான வீதியும் முற்றாக மூடப்பட்டது. இதன் காரணமாக பல மணிநேரம் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    புகையிரத பாதையை சீர்செய்யும் நடவடிக்கையை தொழிநுட்பவியலாளர்களும் ஊழியர்களும் மேற்கொண்டு வருகின்றனர். 

    பிரதான விதியின் குறுக்கே நின்ற புகையிரதத்தின்  ஒரு பகுதி பல மணி நேரத்திற்கு பிறகு பின் நோக்கி நகர்த்தப்பட்டு பிரதான வீதி தற்போது போக்குவரத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

​     புகையிரத பாதையை பழைய நிலமைக்கு கொண்டுவர மேலும் தாமதமாகும் என் தெரியவருகிறது.

நன்றி

Leave a Reply