நேபாளத்தில் 1,500 கைதிகள் தப்பியோட்டம்! – Athavan News

நேபாளத்தில் நிலவி வரும் கலவரங்களின் நடுவே, தலைநகர் காட்மண்டுவுக்கு அருகிலுள்ள லலித்பூர் மாவட்ட நாகு சிறையில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்ததாவது, ராஸ்திரிய சுவாதந்திரக் கட்சி தலைவர் ரவி லமிச்சானே விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கைதிகள் அனைவரும் சிறையிலிருந்து வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சிறையில் குறைந்தது 1,500 கைதிகள் இருந்ததாகவும், பொலிஸார்  தங்கள் கடமைகளில் இருந்து விலகியதால் கைதிகள் எளிதில் தப்பிச் செல்ல முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய கைதிகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply