அரசாங்க வீட்டுவசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் இரண்டு தனித்தனி ஊழல் வழக்குகளில், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் இன்று (02) 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ஒவ்வொரு வழக்கிலும் டாக்கா சிறப்பு நீதிபதி நீதிமன்றம் ஹசீனாவுக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அரசு நடத்தும் BSS செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புர்பச்சோலில் உள்ள ராஜுக் புதிய நகரத் திட்டத்தின் கீழ் நிலங்களை ஒதுக்குவதில் முறைகேடுகள் நடந்ததாகக் […]
